கலுக் முலுக்னு நெல்லு குத்தும் கந்தன் பொண்டாட்டி

Kaluk-Muluk! Kandhan's Wife Pounds the Paddy

கந்தன்னு ஒரு திருடன், குட்டிப் பையன் மணியோட மாடு கன்னு எல்லாத்தையும் ஓட்டிக்கிட்டுப் போயிடுறான். அப்ப குட்டி உண்ணி ஒரு பாட்டுப் பாடுது; பல்லி, பூரான், தேளு, பாம்பு, உரல், உலக்கை எல்லாம் கூடவே கெளம்புதுங்க. ஒத்துமையே பலம், அன்பு அதைவிடப் பெரிய பலம்னு சொல்ற ஒரு சிரிப்புக் கதை, அஞ்சு பாட்டுங்களோட.

📖 படக் கதைப் புத்தகம்

இந்தக் கதை அச்சுப் படப் புத்தகமா, உள்ள பாட்டுகளோட.

படப் புத்தகம் தயாராகிட்டு இருக்கு. உங்க email கொடுங்க, வந்த அன்னிக்கே சொல்றோம்.

உங்களுக்குப் பிடிச்ச podcast app-ல கேளுங்க

கதையை வீட்டுக்குக் கொண்டு போங்க

பரிசுப் பொருட்கள்

பாட்டி, வாளை மீன், ரோஜாச் செடி படம் போட்ட பை, கப், டி-ஷர்ட்.

வாங்க

கெட்டி அட்டைப் புத்தகம், உங்க மொழியில இந்தப் புத்தகம், இல்லன்னா நூலகத்துக்குப் பிரதிகள் வேணுமா? எங்ககிட்ட சொல்லுங்க →

பாட்டுங்க

மாடு போச்சு கன்னு போச்சு மணியண்ணே

மாடு போச்சு கன்னு போச்சு மணியண்ணே காடு மேடு தேடிப் போவோம் மணியண்ணே குட்டி உண்ணி நானிருப்பேன் மணியண்ணே கொட்டி கொட்டி மீட்டிடுவோம் மணியண்ணே கன்னு மாடு போன பாதை கால்தடமா தெரியுது கால்தடத்த கண்டு வழி தேடி நாம செல்லுவோம் கன்னு மாட்ட மீட்டிடவே கருணை உள்ளோர் வாருங்க கன்னு மாட்ட மீட்டிடவே கருணை உள்ளோர் வாருங்க

▶ கதையில பாருங்க

உண்ணி பின்னே

உண்ணி பின்னே மணி போக மணி பின்னே பல்லி போக பல்லி பின்னே பூரான் போக பூரான் பின்னே தேளு போக தேளு பின்னே பாம்பு போக பாம்பு பின்னே உரல் போக உரல் பின்னே உலக்கை போக உரலு தாளம் டொக்கு டொக்கு (2) உலக்கை தாளம் டக்கு டக்கு (2) எறும்பு ஊர ஊர கல்லும் தேயுமே எல்லாம் ஒத்துமையா போனா உரலும் உருளுமே எவ்ளோ பெரிய வரிசை...? வரிசை முன்னே யாரு? நம்ம உண்ணி பாரு!

▶ கதையில பாருங்க

கலுக் முலுக்னு நெல்லு குத்தும் கள்ளன் பொண்டாட்டி

கலுக் முலுக்னு நெல்லு குத்தும் கள்ளன் பொண்டாட்டி களவு மாட்ட கட்டி வச்ச கள்ளன் பொண்டாட்டி திருடி வந்த மாட்ட விடு கள்ளன் பொண்டாட்டி தரலன்னாக்கா கொட்டு விழும் கள்ளன் பொண்டாட்டி

▶ கதையில பாருங்க

தலையினிலே உண்ணி கடிக்க

தலையினிலே உண்ணி கடிக்க கள்ளன் பொண்டாட்டி ஈருளியிலிருந்து பூரான் பூர கள்ளன் பொண்டாட்டி தீப்பெட்டியிலிருந்து தேளு கொட்ட கள்ளன் பொண்டாட்டி தொடப்பத்திலிருந்து பாம்பு கொத்த கள்ளன் பொண்டாட்டி உரல் உருண்டு உலக்கை தட்ட கள்ளன் பொண்டாட்டி மாடு கன்ன மீட்டாச்சே கள்ளன் பொண்டாட்டி மாடு கன்ன மீட்டாச்சே கள்ளன் பொண்டாட்டி!

▶ கதையில பாருங்க

கொட்டு பட்டும் திருந்தலையே

கொட்டு பட்டும் திருந்தலையே மணித்தம்பி குட்டு பட்டும் திருந்தலையே மணித்தம்பி வைத்தியர அனுப்புனியே மணித்தம்பி உன் அன்புலதான் திருந்திப்புட்டோம் மணித்தம்பி திருட்டு வேலை விட்டுப்புட்டோம் மணித்தம்பி உழைச்சு நாங்க வாழ்ந்திடுவோம் மணித்தம்பி கள்ளன் பொண்டாட்டி பேரு போதும் மணித்தம்பி கந்தன் பொண்டாட்டின்னு கூப்பிடுங்க மணித்தம்பி மன்னிச்சிடு மன்னிச்சிடு மணித்தம்பி மன்னிச்சிடு மன்னிச்சிடு மணித்தம்பி

▶ கதையில பாருங்க