The vaalai fish song
வாளையண்ணே வாளையண்ணே
வழிகாட்டு வாளையண்ணே
ஆழமான ஏரியில
அக்கரைக்கு வழிகாட்டு
சின்ன அண்ணன் வயலுக்கு
சோறு கொண்டு போறேனண்ணே
வரும் போது உனக்குச் சோறு
வயிறார தாரேனண்ணே
Vaalai brother, vaalai brother,
show me the way, vaalai brother.
The lake is deep;
show me the way across, brother.
I'm taking rice
to Chinna Annan's field, brother;
on my way back I'll give you rice,
a bellyful, brother.
Asking for flowers
ஊரு ஒலகத்துல ஒரு பூவும் பூக்கலையே
நாடு நகரத்திலே நல்ல பூ விக்கலையே
தங்கச்சி கொண்டைக்கு
தாழம்பூ வேணுமடா
தாலி கட்டும் வேளைக்கு
மல்லி முல்லை வேணுமடா
மாலை கட்ட ரோஜாப்பூ
மனசார நீ குடுடா
மயக்கும் செண்பகப்பூ
மறுக்காம நீ குடுடா
In the whole wide world not one flower blooms,
in town and country no good flowers are sold.
For our sister's hair
we need thaazhampoo;
for the tying of the thaali
we need jasmine and mullai.
Roses to string her garland,
give them with all your heart;
sweet shenbagam flowers,
give them, don't refuse.
The rosebush answers
சின்ன அண்ணன் அடிச்சான்னு
சொன்னாளே நெட்டூரி
நெட்டூரி கொண்டைக்கி
நிறக்குமோ எம் பூவு
காந்தாரி கொண்டைக்கி
கணக்குமோ எம் பூவு
எம் பூவ தரமாட்டேன்
எந்நாளும் தரமாட்டேன்
"Chinna Annan hit me,"
she said, the liar!
Would that liar's hair
be brightened by my flowers?
Would that wicked girl's hair
be fit for my flowers?
I will not give my flowers,
never, ever will I give them.
The little sister's song
வாளையண்ணே அடிச்சதையே
வந்ததுமே சொல்லலண்ணே
சின்ன அண்ணே அடிச்சான்னு
சொன்னதெந்தன் தப்புதாண்ணே
தப்பை நீ பொறுத்திடணும்
தவறேதும் செய்யமாட்டேன்
பிழையை நீ பொறுத்திடணும்
பொய் இனிமே சொல்லமாட்டேன்
தெய்வமாய் வந்து நீயும்
திருமணத்தை நடத்திடண்ணே
When Brother Vaalai struck me,
I didn't tell it as soon as I came home;
saying "Chinna Annan hit me,"
that was my fault, brother.
You must forgive my wrong;
I will do no wrong again.
You must forgive my mistake;
I will never lie again.
Come as a god, brother,
and see my wedding done.
The rosebush's blessing
அழுதிடாதே என் தங்கே
அண்ணன் நான் பூ தாரேன்
அறியாம செஞ்ச பிழையை
அறவே நான் மறந்திடுறேன்
செவத்த புள்ள கொண்டைக்கு
செண்பகப்பூ நான் தாரேன்
கலியாண மாலைக்கு
கை நெறைய பூ தாரேன்
தப்பேதும் செய்யாம
தழைச்சு நீ வாழ்ந்திடணும்
பொய்யேதும் சொல்லாம
பொலிவா நீ வாழ்ந்திடணும்
Don't cry, my little sister,
I, your brother, will give you flowers;
the wrong you did without knowing,
I forget it completely.
For my fair girl's hair
I'll give you shenbagam;
for your wedding garland,
flowers by the handful.
Do no wrong,
and may you live and flourish;
tell no lies,
and may you live and shine.